Home செய்திகள் தேசிய செய்திகள் சமூக ஆர்வலர் கொலை: கைதானவரின் வீடு இடிப்பு

சமூக ஆர்வலர் கொலை: கைதானவரின் வீடு இடிப்பு

மான்சா, அக். 15- பஞ்சாப் மாநிலம் மான்சாவைச் சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் அஸ்வனி குமார், தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சமூக ஆர்வலர் பர்விந்தர் சிங்கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அஸ்வனி குமார் தலைமறைவானார். அவரைப் பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்தனர். ராஜஸ்தான் மாநிலம் சலாசரில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அஸ்வனி குமாரின் வீட்டை புல்டோசர்கள் மூலம் அதிகாரிகள் இடித்தனர். இந்த வழக்கில் அஸ்வனி குமாரின் உறவினரான விபினும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். அஸ்வனி குமார் மட்டுமின்றி, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. நீதி கிடைக்கும் வரையிலும், முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரையிலும் பர்விந்தர் சிங்கின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்தப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, 15-ம் தேதி பஞ்சாப் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.