Home மாவட்டங்கள் சென்னை உதயநிதி திடீர் துபாய் பயணம்

உதயநிதி திடீர் துபாய் பயணம்

சென்னை: ​அக். 19-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் சென்னை நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதேபோல் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதியில் மழைநீர் தேங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், உதயநிதி ஸ்டாலின் திடீரென நேற்று துபாய் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையம் வந்த அவரிடம், சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் எந்தவித பதிலும் அளிக்காமல் சென்றார். மழை வெள்ளத்தால் மக்கள் சிரமப்பட்டு வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளது. பயணத்தை முடித்துக்கொண்டு உதயநிதி 21-ம் தேதி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.