Home செய்திகள் தேசிய செய்திகள் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்க வேண்டும்

இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்க வேண்டும்

புதுடெல்லி, அக். 21-
இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அடையாளம் கண்டு தோற்கடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். டெல்லி துவாரகா பகுதியில் ஸ்ரீ ராம் லீலா சொசைட்டி சார்பில் நடைபெற்ற தசரா விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் மூத்த அமைச்சர்களும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நாடு முழுவதும் தசரா கொண்டாடப்பட்டு வருவதாகவும், பல்வேறு நகரங்களில் ராம்லீலா நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் பகவான் ராமரின் நல்லாட்சி மற்றும் நற்குணங்கள் மக்களுக்கு எடுத்துரைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். கிழக்கு டெல்லியைச் சேர்ந்த ஸ்ரீ ராம் லீலா கமிட்டி சார்பில், டிடிஏ உத்சவ் மைதானத்தில் ஆண்டுதோறும் தசரா விழா நடத்தப்பட்டு வருகிறது. அங்கு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: தசரா வெறும் விழா மட்டுமல்ல; அது இந்தியாவுக்கு ஊக்க சக்தி அளிக்கும் நிகழ்ச்சியாகும். தசராவை முன்னிட்டு நாடு முழுவதும் ராம்லீலா நாடகங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றின் மூலம் பகவான் ராமரின் போதனைகள் மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன. தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்றும், பொய்மையை வாய்மை வெல்லும் என்றும் ராம்லீலா தெளிவுபடுத்துகிறது.