
புதுடெல்லி,
அக். 21- விஜயதசமியை முன்னிட்டு, வழக்கமாக எரிக்கப்படும் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உருவப்பொம்மைகளுடன், டெல்லி பிதம்பராவில் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவப்பொம்மையும் நேற்று எரிக்கப்பட்டது.
சிஜேபி-க்கு எதிரான கேலி நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. கரப்பான் பூச்சி உருவப்பொம்மை எரிக்கப்படுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே மற்றும் சட்டப் பிரிவு தலைவர் ரத்னாசிங் கூறுகையில், “இலவச விளம்பரத்துக்கு நன்றி. இந்த நாட்டில் வெறும் கூத்துகளை மட்டுமே நடத்திக்கொண்டிருங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
அவர்களின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. பல பயனர்கள், கரப்பான் பூச்சி உருவப்பொம்மை எரிக்கப்பட்டதைத் தீமையின் மீதான நன்மையின் வெற்றியுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.













