Home மாவட்டங்கள் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது

பெங்களூரு, அக். 30-
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகளை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு (சி.சி.பி.) போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கொலை முயற்சி வழக்குபெங்களூரு கெங்கேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரஜ்வல் (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது கெங்கேரி மற்றும் ஆர்.ஆர்.நகர் போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உட்பட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கெங்கேரி போலீஸ் நிலையத்தில் பதிவான கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பிரஜ்வல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இதையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பிரஜ்வலை சி.சி.பி. போலீசார் நேற்றைய தினம் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக கெங்கேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல், வில்சன் கார்டன் பகுதியைச் சேர்ந்த மொகமது மொயினுதீன் (25) என்ற ரவுடி மீது வில்சன் கார்டன் மற்றும் எஸ்.ஆர்.நகர் போலீஸ் நிலையங்களில் 3 கொள்ளை வழக்குகள் உள்ளன. இவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடி வந்த சி.சி.பி. போலீசார், மொகமது மொயினுதீனையும் அதிரடியாக கைது செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த துரித நடவடிக்கையில் ஈடுபட்ட சி.சி.பி. போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.