Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்க இடைத்தேர்தல் தோல்வி வரலாற்றுப் பின்னடைவு: ட்ரம்ப்

அமெரிக்க இடைத்தேர்தல் தோல்வி வரலாற்றுப் பின்னடைவு: ட்ரம்ப்

வாஷிங்டன், நவ. 9-
அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் முடிவு அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.தமது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், தேர்தல் முடிவுகளால் அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஒரே நாளில் சுமார் 3 டிரில்லியன் டாலர் அளவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.அவர் வெளியிட்ட பதிவில், “கடந்த தேர்தல் முடிவுகளின் மூலம் அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. ட்ரம்ப் ஆட்சியில் ஒரு ராக்கெட் போல உயர்ந்து வந்த பங்குச் சந்தையும் ஒரே நாளில் 3 டிரில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது. ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். நாங்கள் முன்பைவிட மிகவும் வலுவாகவும் பிரம்மாண்டமாகவும் மீண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.