
புதுடில்லி: நவ. 13- உலகளவில் செல்வாக்குமிக்க இந்திய வம்சாவளியினர் பட்டியலில் ஆல்பபெட் (கூகுள்) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை முதலிடம் பிடித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா 2-வது இடத்தைப் பெற்றுள்ளார். மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா 3-வது இடத்தில் உள்ளார்.இந்திய வம்சாவளியினர் உலகம் முழுவதும் அரசியல், நிர்வாகம், கல்வி, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான உலகளவில் செல்வாக்குமிக்க இந்திய வம்சாவளியினர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், உலகளவில் பெருநிறுவனங்களைத் தலைமையேற்று நடத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 236 தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.இவர்கள் தலைமை வகிக்கும் 200 நிறுவனங்களின் மொத்த மதிப்பு 15 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் உலகம் முழுவதும் சுமார் 53 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றன.சுந்தர் பிச்சையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆல்பபெட் நிறுவனத்தின் மதிப்பு 4.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. சத்யா நாதெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்பு 2.6 டிரில்லியன் டாலராகவும், சஞ்சய் மெஹ்ரோத்ரா தலைமையிலான மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் மதிப்பு 1.4 டிரில்லியன் டாலராகவும் உள்ளது.2024-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆல்பபெட் நிறுவனத்தின் மதிப்பு 98 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்பு 17 சதவீதம் குறைந்துள்ளது. இந்திய வம்சாவளி அதிகாரிகள் வழிநடத்தும் 200 நிறுவனங்களின் மொத்த மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 53 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு செயற்கை நுண்ணறிவு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அந்த 200 நிறுவனங்களில் 103 நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்தோ அல்லது அதனுடன் தொடர்புடையதாகவோ இயங்கி வருகின்றன.இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தென் ஆப்பிரிக்க சமூகச் செயல்பாட்டாளர் நவநீதம் நவிக்கு வழங்கப்பட்டது.













