Home செய்திகள் உலக செய்திகள் அதிக கடன் சுமை நாடுகள் பட்டியல்

அதிக கடன் சுமை நாடுகள் பட்டியல்

வாஷிங்டன், அக். 21-
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, உலக அளவில் அதிக கடன் சுமை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 26-ஆவது இடத்தில் உள்ளது. கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி (Debt-to-GDP) விகிதத்தின் அடிப்படையில், இந்தியாவின் கடன் சுமை 83.1 சதவீதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவின் கடன் சுமை ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாகவும் கட்டுக்குள் இருக்கும் நிலையிலும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
உலகிலேயே தங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட மிக அதிகமான அரசு கடன் கொண்ட நாடுகளின் பட்டியலில் சூடான் முதலிடத்தில் உள்ளது. IMF வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான சமீபத்திய தரவுகளின்படி,
சூடானின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 334.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அந்நாட்டில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அதன் கடன் சுமை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளைக் காட்டிலும் சூடானின் கடன் நிலை மோசமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.