
வாஷிங்டன், அக். 21-இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த ஒப்பந்தம் அமெரிக்கா இதுவரை செய்துள்ள ஒப்பந்தங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா சென்ற மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீரை சந்தித்து,
ஒப்பந்தத்தின் நுணுக்கமான அம்சங்கள் குறித்து விவாதித்தார். இதற்கிடையே, நேற்று இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவித்தார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவை களையப்படும்.
வெகு விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றார்.மேலும்,
பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவது சிறந்த வணிக நடவடிக்கை என்றும் ரூபியோ குறிப்பிட்டார். கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் இந்தியா “சூப்பர் பவராக” உருவெடுத்துள்ளதாகக் கூறிய அவர், வெனிசுலா நாட்டின் கச்சா எண்ணெயை இந்திய நிறுவனங்களுக்கு வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், “அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா விரும்புகிறது. நாங்களும் அதை விரும்புகிறோம்.















