Home மாவட்டங்கள் சென்னை தமிழகத்தில் கால்நடை வளர்ப்புக்கு ரூ.3,000 கோடி கடன்

தமிழகத்தில் கால்நடை வளர்ப்புக்கு ரூ.3,000 கோடி கடன்

சென்னை, செப். 22- தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம், இந்த நிதியாண்டில் கால்நடை வளர்ப்பு தொடர்பாக ரூ.3 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிரிவில், நடப்பு நிதியாண்டுக்காக ரூ.3 ஆயிரம் கோடி கடன் வழங்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வாரியாக வழங்கப்பட உள்ள கடன் தொகையில், அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்துக்கு ரூ.440 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் தொடர்புடைய தொழில்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கப்பட உள்ளது. இதனிடையே, வேளாண் சாகுபடிக்காக பெறப்பட்ட பயிர்க் கடனை முழுமையாகவும் நிலுவையின்றியும் செலுத்திய விவசாயிகளுக்கு புதிய கடன்களை வழங்கவும் கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அந்த விவசாயிகளுக்கு இந்த மாதம் 30-ம் தேதிக்குள் புதிய கடன்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மண்டல இணைப் பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கால்நடை, மீன் மற்றும் தேனீ வளர்ப்பு உள்ளிட்ட தொழில்கள் வேளாண் சார்ந்த நடவடிக்கைகளாகக் கருதப்பட்டு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் இக்கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிதியாண்டில் இத்திட்டத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடி கடன் தொகையில், திருச்சி மாவட்டத்துக்கான ரூ.440 கோடி மிகப்பெரிய ஒதுக்கீடாக உள்ளது.