Home மாவட்டங்கள் சென்னை தமிழக முழுநேர ஆளுநராக ஆர்லேகர் நியமனம்

தமிழக முழுநேர ஆளுநராக ஆர்லேகர் நியமனம்

சென்னை, அக். 13-
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தமிழக ஆளுநராக கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பதவி வகித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் அவர் மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து, கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்த ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரிடம் தமிழக ஆளுநருக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அவர் தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சிக்கிம் மாநில ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் மாத்தூர், கேரள மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்த ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.