Home விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

தோஹா, நவ. 4- ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி தோஹாவில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்​டர் பிஸ்​டல் அணிகள் பிரி​வில் இந்தியா தங்கப் பதக்கம் வென்​றது. ரவிந்​தர் சிங், சவுரப் சவுத்​திரி, அமன்​பிரீத் சிங் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறுதிப் போட்டி​யில் 1,659 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றது.சீனா அணி (1,648) வெள்​ளிப் பதக்​கமும், கொரியா அணி (1,643) வெண்​கலப் பதக்​கமும் கைப்​பற்​றின. இளவேனிலுக்கு வெள்ளி: மகளிர் 10 மீட்​டர் ஏர் ரைபிள் அணிப் பிரி​வில் இந்​தி​யாவின் இளவேனில் வாலறிவன், சோனம் உத்​தம் மஸ்​கர், சாம்​பவி ஷிராவன் சிர்​சாகர் ஆகியோர் அடங்​கிய அணி 2-ம் இடம் பிடித்து வெள்ளி வென்​றது. இப்​பி​ரி​வில் சீனா தங்​கமும், ஜப்​பான் வெண்​கலமும் வென்​றது.