Home செய்திகள் தேசிய செய்திகள் சந்திரபாபு நாயுடு விஜய் பேசியது என்ன

சந்திரபாபு நாயுடு விஜய் பேசியது என்ன

விஜயவாடா: அக்.14-
கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நதி நீர் இணைப்பு திட்​டம் குறித்து தமிழக முதல்​வர் ஜோசப் விஜய், ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு உடன் சுமார் ஒன்​றரை மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்​தி​னார்.
தமிழக முதல்​வர் ஜோசப் விஜய் நேற்று ஒரு நாள் பயண​மாக ஆந்​திர மாநிலம் சென்​றார். விஜய​வாடா விமான நிலை​யத்​தில் அவரை ஆந்​திர மாநில அமைச்​சர் நாராயணா வரவேற்​றார். முதல்​வர் விஜய்​யுடன் அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜு​னா, என்​.ஆனந்த் ஆகியோர் சென்​றிருந்​தனர்.
பட்டு வேட்​டி, சட்​டை​யில் சென்​றிருந்த முதல்​வர் விஜய், விஜய​வாடா கனக துர்​க்கை​யம்​மனை தரிசித்​தார். அங்​கிருந்து உண்​ட​வல்​லி​யில் உள்ள ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வின் வீட்​டுக்கு சென்​றார். அங்கு சந்​திர​பாபு நாயுடு, தமிழக முதல்​வர் விஜய்க்கு சால்வை அணி​வித்து பூங்​கொத்து கொடுத்து வரவேற்​றார். பின்​னர், தெலுங்கு – கங்கை கால்​வாய் திட்​டம், கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நதி நீர் இணைப்பு போன்ற விவ​காரங்கள் தொடர்பாக இரு மாநில முதல்​வர்​களும் சுமார் ஒன்​றரை மணி நேரம் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.
அப்​போது, இந்த நதி​களை இணைப்​ப​தன் மூலம் ஆந்​திரா மட்​டுமல்​லாமல் தென் மாநிலங்​கள் அனைத்​தும் வளம் பெரும்.இதனால் மத்​திய அரசின் உதவி​யுடன் நாம் அனை​வரும் ஒன்​றுபட்டு இந்த திட்​டத்தை நிறைவேற்​று​வோம் என முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​யுள்​ளார்.
அதே சமயத்​தில் தெலுங்கு கங்கை குடிநீர் கால்​வாய் திட்​டம் மூலம் ஆந்​தி​ரா​வில் இருந்து சென்​னைக்கு குடிநீர் வழங்​கப்​பட்டு வரு​கிறது. ஆனால், ஒப்​பந்​தப்​படி நீரின் அளவு வழங்​கப்​படு​வ​தில்​லை. இந்த ஆண்டு இது​வரை 4.08 டிஎம்சி அளவு மட்​டுமே தண்​ணீர் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த அளவை அதி​கரி​க்க வேண்டும் என்று முதல்​வர் விஜய் கோரிக்கை வைத்​தார்.அதன் பின்​னர், இரு மாநில முதல்​வர்​களும் ஒன்​றாக சேர்ந்து விஜய​வாடா பவுர்​ணமி படித்​துறை பகு​திக்கு சென்​றனர். அங்கு ஏற்​பாடு செய்​திருந்த ‘விஜய​வாடா உத்​சவ்​-2.0’ வில் கலந்து கொண்​டனர். அப்​போது அங்கு கூடி​யிருந்த ஏராள​மான மக்​கள் தமிழக முதல்​வர் விஜய்யை பார்த்து உற்​சாக​மாக கை அசைத்​தனர்.கூட்​டத்​தில் ஒரு சிறுமி ‘விஜய் மாமா என்​னுடன் ஒரு செல்ஃபி’ என ஒரு அட்​டை​யில் எழுதி காண்​பித்​தார். அதனை பார்த்து மகிழ்ச்சி அடைந்த முதல்​வர் விஜய், தனது கைகள் மூலம் சைகை​யில் இதயம் போன்று காண்​பித்​தார். இதையடுத்து ரசிகர்​கள் ஆரவாரம் செய்​தனர்.