
சென்னை, அக். 14-
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த 3 கோரிக்கைகளையும் முதல்வர் விஜய் ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக விஜய் குரல் கொடுக்க வேண்டும், தவெக அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி போராட்டத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும், மேலும் டெல்லிக்கு நேரில் வந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், இதுகுறித்து விஜய் உறுதியான பதில் எதையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. டெல்லியில் ஞானேஷ் குமாருக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை ராகுல் காந்தி திடீரென சென்னை வந்தார். அவரது பயணத் திட்டத்தில் முதலில் விஜய்யைச் சந்திப்பது இடம்பெறவில்லை. எனினும், மாணிக்கம் தாகூர் ஏற்பாட்டில் விஜய்யிடம் நேரம் பெறப்பட்டு, இருவரின் சந்திப்பு உறுதி செய்யப்பட்டது. விஜய்யின் வீட்டுக்கு வந்த ராகுல் காந்தியை, வீட்டின் வாசல் வரை வந்து விஜய் வரவேற்றார். பின்னர், தமிழக அரசியல் சூழல் குறித்து சிறிது நேரம் இருவரும் விவாதித்தனர். தொடர்ந்து டெல்லியில் எஸ்ஐஆர், ஞானேஷ் குமார் மற்றும் பாஜகவுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து பேச்சு திரும்பியது. “கடந்த 12 ஆண்டுகளில் பாஜகவுக்கு எதிராக இதுபோன்ற எதிர்ப்பை உருவாக்கியதில்லை. எஸ்ஐஆருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது. ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி அழுத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெக அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி போராட்டத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும்” என்று ராகுல் காந்தி கேட்டதாகத் தகவல். இதற்கு, எஸ்ஐஆர் விவகாரத்தில் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், தவெக நிலைப்பாட்டை அறிவித்துவிட்டதாகவும் விஜய் கூறியதாகத் தெரிகிறது. மற்ற விஷயங்கள் குறித்து ஆலோசித்து பதில் அளிப்பதாக அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது பிரவீன் சக்கரவர்த்தி உடன் இல்லை. பின்னர், கூட்டணியில் மனக்கசப்பு இல்லை என்பதைக் காட்டும் வகையில் ராகுல் காந்தியும் விஜய்யும் காபி ஷாப்புக்குச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. RAHUL-? No. Further, அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரத்திலும் காங்கிரஸை தவெக கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.















