Home மாவட்டங்கள் பெங்களூர் மைசூர் யுவ தசரா விழா கோலாகல தொடக்கம் – நடிகர் பிரபுதேவா பங்கேற்பு

மைசூர் யுவ தசரா விழா கோலாகல தொடக்கம் – நடிகர் பிரபுதேவா பங்கேற்பு

மைசூரு: அக். 14-
இளைஞர்கள் அன்றாட பணிகள் மற்றும் சவால்களுக்கு இடையே தங்களை இழந்துவிடாமல், நேர்மறை சிந்தனைகள், தெளிவான இலக்கு மற்றும் படைப்பாற்றலுடன் வளர்ச்சியின் பாதையில் முன்னேற வேண்டும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் டாக்டர் யதீந்திர சித்தராமையா தெரிவித்தார்.
மைசூர் உத்தனஹள்ளியில் உள்ள புனித ஜவாலாமுகி திரிபுர சுந்தரி கோவில் அருகில் உள்ள வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் யுவ தசரா துணைக்குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட ‘யுவ தசரா’ விழாவைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
கலாச்சார நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் மனமுவந்து பங்கேற்று வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். இளைஞர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் நோக்கில் இந்த ஆண்டின் யுவ தசரா மேடை மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மைசூர் மண்ணின் பெருமைக்குரிய நடனக் கலைஞரும், பிரபல நடிகருமான பிரபுதேவா இந்த கலாச்சார விழாவைத் தொடங்கி வைத்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தார்.
இந்த சுப நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஜி.டி.தேவேகவுடா, ஹரீஷ் கவுடா, தன்வீர் சேட், ரவிசங்கர், மேலவை உறுப்பினர்கள் ரகு கௌடில்யா, மஞ்ஜேகவுடா, பல்வேறு வாரியத் தலைவர்கள், நிர்வாகிகள், தலைவர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். நடிகர் பிரபுதேவா இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.