
நெல்லூர், செப். 30-
ஆந்திர அரசு சார்பில் கிராமப்புற வளர்ச்சியை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் ‘கிராமத்து பண்டிகை 3.0’ திட்டத்தை, நெல்லூர் மாவட்டம் ராமாபுரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் மாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, “மத்திய அரசின் உறுதுணையுடன் நமது கூட்டணி அரசு ஆந்திர மாநிலத்தில் ‘ஜெட்’ வேகத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார். ‘கிராமத்து பண்டிகை 3.0’ திட்டத்துக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.11,085 கோடி நிதி ஒதுக்கி வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தில் கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் உள்ள துணை முதல்வர் பவன் கல்யாண், கிராமங்களின் வளர்ச்சிக்காகப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சந்திரபாபு நாயுடு கூறினார்.













