
டெல் அவிவ், செப். 30-
துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிப் பறந்த ‘பிளைதுபாய்’ பயணிகள் விமானம், திடீரென ‘விமானம் கடத்தப்பட்டு விட்டது’ என்ற அதிர்ச்சி தரும் அவசர குறியீட்டை அனுப்பியது. இதனால் பதறிப்போன இஸ்ரேல் ராணுவம், உடனடியாகத் தனது போர் விமானங்களை வான்வெளியில் சீறிப்பாய விட்டது.
ஆனால், சவூதி அரேபிய வான்வெளியில் பறந்த அந்த விமானம், தொழில்நுட்பத் தவறால் தவறான எச்சரிக்கையை அனுப்பிவிட்டுப் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அடுத்து, கடத்தல் பீதி அடங்கி அனைவரும் பெருமூச்சு விட்டனர்.













