Home மாவட்டங்கள் சென்னை தாராபுரத்தில் முதல்வர் விஜய் இன்று பிரசாரம்

தாராபுரத்தில் முதல்வர் விஜய் இன்று பிரசாரம்

தாராபுரம்: செப். 30-
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, முதல்வர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக, தாராபுரம் சித்தராவுத்தன்பாளையம் பகுதியில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று முதல்வர் விஜய் பேச உள்ளார். கூட்டத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, ‘கியூ ஆர்’ குறியீட்டுடன் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு இருக்கும்.
பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதல்வர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரம் பிரசாரத் திடலுக்குச் சென்று, கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பிரசாரத்தை முடித்துக்கொண்டு, இன்று இரவு அவர் சென்னை திரும்புகிறார்.