Home மாவட்டங்கள் சென்னை தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

சென்னை, செப். 29-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தற்போது தமிழக முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இத்திட்டம், சமூகத்தில் ஒரு தாய்மாமனின் உணர்வுபூர்வமான அன்பு, ஆதரவு, நம்பிக்கை ஆகியவற்றை பெண்களுக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்துடனும் பெண்களுக்கு ஏற்பட உள்ள பாசம், பந்தம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் நல்லுறவை இத்திட்டம் வலுப்படுத்தும். மேலும், குழந்தை பிறந்த நாளன்றே அவர்களின் எதிர்காலம் வசந்த காலமாக மாறுவதற்கான அடையாளமாகவும் இத்திட்டம் திகழும். இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.