Home மாவட்டங்கள் சென்னை 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் கோரி விஜய் மனு

5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் கோரி விஜய் மனு

சென்னை, செப். 29-
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் தாமதமின்றி தேர்தல் நடத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டப் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சட்டப்பேரவையில் பெரும்பான்மையைத் தக்கவைக்க காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. காலியாக உள்ள 7 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றி தனிப் பெரும்பான்மையுடன் முடிவுகளை எடுக்க முடியும் என விஜய் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததற்கு, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான கே.வெங்கடாசலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு காரணமாகும். கடந்த பொதுத்தேர்தல் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவை முடியும் வரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என அவர் கோரியிருந்தார்.