
திருவனந்தபுரம், அக்.4-
மலேசியாவைச் சேர்ந்த சிவில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட 2006-ஆம் ஆண்டு வழக்கில், தற்போதைய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு கேரளா உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு, கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின்கீழ் மெயின் சென்ட்ரல் சாலையை மேம்படுத்தும் பணியில் பதி-பெல் கூட்டமைப்பு ஈடுபட்டிருந்தது. அப்போது, கேரள மாநில பொதுப்பணித்துறை செயலாளராக ஞானேஷ் குமார் பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில், இந்த திட்டத்தில் பணியாற்றிய மலேசியாவைச் சேர்ந்த சிவில் என்ஜினீயர் லீ சீ பீன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலை கடிதத்தில் ஞானேஷ் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஒப்பந்ததாரர்களுக்கு பொதுப்பணித் திட்டங்களை ஒதுக்கியதில் ஞானேஷ் குமார் குற்றவியல் ரீதியிலான தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியபோதிலும், அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கை பயன்படுத்தி அந்த விசாரணை திடீரென முடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், மலையன்கீழ் வேணுகோபால் என்பவர் அளித்த புகாரை தொடர்ந்து, வெளி அழுத்தங்கள் காரணமாக முந்தைய விசாரணை முடக்கப்பட்டதா என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு உள்துறை அமைச்சர் சென்னிதலா நேரடியாக உத்தரவிட்டுள்ளார், வேண்டாம் அமுல்.














