Home மாவட்டங்கள் பெங்களூர் லாரி மோதி கல்லூரி மாணவி பரிதாப பலி

லாரி மோதி கல்லூரி மாணவி பரிதாப பலி

an Indian or Asian person laying on floor dead during COVID-19 or corona virus outbreak with selective focus or shallow depth of field

காசான்: செப். 30-
காசான் நகரின் விஸ்வகர்மா சந்திப்பில் நடந்த கொடூர சாலை விபத்தில் பிளஸ் 2 (இரண்டாம் ஆண்டு பி.யு.சி) மாணவி உயிரிழந்தார். மற்றொரு மாணவி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிகழ்ந்தது என்ன?
காசான் நகரைச் சேர்ந்த மாணவி லிகிதா (18). கல்லூரி முடிந்து வீடு திரும்பிய அவர், பின்னர் தனது தோழி சின்மயி என்பவருடன் ஸ்கூட்டரில் நகரை நோக்கிச் சென்றுள்ளார். காசான் பேருந்து நிலையத்திலிருந்து டைரி பகுதியை நோக்கி ஸ்கூட்டரைத் திருப்பியபோது, அதிவேகமாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் லிகிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சின்மயி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் ஆத்திரம்:
லாரி ஓட்டுநர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததே விபத்துக்குக் காரணம் என குற்றம் சாட்டிய பொதுமக்கள், ஓட்டுநருக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் ஈடுபட்டனர்.
நகரத்திற்குள் கனரக லாரிகள் நுழைய அனுமதி அளித்தது ஏன் என்றும், விஸ்வகர்மா சந்திப்பில் முறையான போக்குவரத்துச் சிக்னல் மற்றும் அறிவிப்புப் பலகைகள் வைக்காதது ஏன் என்றும் காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.