
புதுடெல்லி, செப். 30- தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் செயல்படாமல், லாப நோக்கில் செயல்படும் தொழிற்சாலைகளைப் போன்று செயல்படுவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. கிஷன்சென் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் அதிகப்படியான விலை குறித்து கவலை தெரிவித்தது. ரூ.27,000 என அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி.) அச்சிடப்பட்ட ஒரு மருந்தை, வெளிச்சந்தையில் நேர்மையான ஒரு மருந்துக் கடைக்காரர் ரூ.3,000-க்கு விற்பனை செய்ய முன்வந்தாலும், அது போலி மருந்தாக இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்படுவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.













