Home மாவட்டங்கள் பெங்களூர் திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் சோதனை

திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் சோதனை

திருவண்ணாமலை, செப். 25:
திருவண்ணாமலை திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் உள்ள அண்ணாதுரையின் வீடு உள்ளிட்ட, அவருடன் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. வேலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒப்பந்தங்களைப் பெற்று பல்வேறு பணிகளை அண்ணாதுரை மேற்கொண்டபோது முறைகேடுகள் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக அண்ணாதுரை சொத்துகள் சேர்த்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார்களின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.