Home மாவட்டங்கள் பெங்களூர் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் வாலிபர் மிரட்டல்: இல்லத்தரசி தற்கொலை

வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் வாலிபர் மிரட்டல்: இல்லத்தரசி தற்கொலை

an Indian or Asian person laying on floor dead during COVID-19 or corona virus outbreak with selective focus or shallow depth of field

மைசூர்: செப். 25-
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹுணசூர் தாலுகா லக்கனகொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி சிந்து (வயது 34). இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில், சிந்துவுக்கும் விகாஸ் என்ற வாலிபருக்கும் இடையே தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி விகாஸ், சிந்துவை தொடர்ந்து பிளாக்மெயில் செய்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிந்து, திடீரென விஷ மாத்திரையைத் தின்று தற்கொலைக்கு முயன்றார். உயிருக்குப் போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு, மைசூருவில் உள்ள கே.ஆர். மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இறப்பதற்கு முன்பு சிந்து அளித்த வாக்குமூலத்தில், தனது சாவுக்கு விகாஸ் என்பவனே காரணம் என்று கூறியதாகத் தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சிந்துவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் விகாஸுடன் தொடர்ச்சியாக வாட்ஸ்-அப் மெசேஜ் மற்றும் வீடியோ காலில் சிந்து பேசியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிந்துவை தற்கொலைக்கு தூண்டியதாக எல்.கே.விகாஸ், அவரது தந்தை குமார் மற்றும் தாய் வசந்தா ஆகிய 3 பேர் மீது பிரிகேரே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.