Home விளையாட்டு பள்ளிகளுக்கான மாநில வாலிபால் போட்டி தொடக்கம்

பள்ளிகளுக்கான மாநில வாலிபால் போட்டி தொடக்கம்

சென்னை, செப். 30-
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. வரும் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில், மாநிலம் முழுவதும் உள்ள 95 பள்ளிகளைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். போட்டியின் தொடக்க விழாவில் தமிழ்நாடு வாலிபால் சங்கத் தலைவர் ஜெயமுருகன், வாழ்நாள் தலைவர் அர்ஜூன் துரை, வருமானவரித் துறை தலைமை ஆணையர் ஜெக்தீஷ் பிரசாத் சந்திரகர் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை மாவட்ட வாலிபால் சங்க நிர்வாகிகள் ஜெகதீசன், தினகர், பழனியப்பன், கோகலே, ஸ்ரீகேசவன், பாக்யராஜ் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர். மாணவர் பிரிவில் தொடக்க நாளில் தஞ்சாவூர் புனித அந்தோனிஸ், ஈரோடு குமுதா, கன்னியாகுமரி அருணாச்சலம், சேலம் செயின்ட் மேரிஸ், கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ, யேதாபூர் அரசு பள்ளி, பொள்ளாச்சி என்ஜிஎன்ஜி அணிகள் வெற்றி பெற்றன.